< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ராஜபக்சேக்கள் பதுக்கிய பணத்தை மீட்டால் வரி வசூலிக்க தேவையில்லை - இலங்கை முன்னாள் அதிபர்
|16 Dec 2023 8:13 AM IST
ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது என்று சந்திரிகா கூறியுள்ளார்.
கொழும்பு,
இலங்கையில் ராஜபக்சேக்கள் திருடிய பணத்தை திரும்பப் பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று முன்னாள் அதிபர் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.
ராஜபக்சேக்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள நிதியை மீட்பதே இதற்கான தீர்வாக அமையும் என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.