< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இனி பெட்ரோலுக்காக வரிசையில் நிற்க அவசியம் இல்லை ..! வந்துவிட்டது இ-பைக்
|16 Dec 2022 10:15 PM IST
மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஒகாயா, இலங்கை தலைநகர் கொழும்புவில் முதல் ஷோரூமை திறந்துள்ளது
கொழும்பு,
மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஒகாயா, இலங்கை தலைநகர் கொழும்புவில் முதல் ஷோரூமை திறந்துள்ளது. டக்ளஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத்துடன் இனைந்து முதல் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.
முழுவதும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட, மித வேகத்தில் செல்லக்கூடிய பிரீடம், கிளாஸ் ஐ-கியூ, மற்றும் ஏவியன் ஐ-கியூ ஆகிய மூன்று வகை இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், ஒகாயா மற்றும் டக்ளஸ் அண்ட் சன்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இனி பெட்ரோலுக்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை|வந்துவிட்டது இ-பைக் | Electricbike | Colombo#ElectricVehicles #Colombo https://t.co/gBUcjEQdbq
— Thanthi TV (@ThanthiTV) December 16, 2022