< Back
உலக செய்திகள்
ஆடம்பர மாளிகை வேண்டாம் -  ரணில் விக்கிரம சிங்கே அறிவிப்பு
உலக செய்திகள்

ஆடம்பர மாளிகை வேண்டாம் - ரணில் விக்கிரம சிங்கே அறிவிப்பு

தினத்தந்தி
|
23 May 2022 12:27 PM IST

பிரதமரின் இல்லமான அலரி மாளிகைக்கு செல்லப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார்.

கொழும்பு,

பிரதமரின் ஆடம்பர மாளிகை தனக்கு வேண்டாம் என்றும் வீட்டிலிருந்தே தான் பணி செய்யப் போவதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமராக சமீபத்தில் பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்கே தங்குவதற்காக பிரதமர் மாளிகை தயாரானது.

அலரி மாளிகை என்று கூறப்படும் பிரதமர் மாளிகை மிகவும் ஆடம்பரமாக இருக்கும் நிலையில் அந்த மாளிகை தனக்கு வேண்டாம் என்றும் தான் வீட்டிலிருந்தே பணி செய்யப் போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே தெரிவித்துள்ளார்.

அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு தனக்கும் பொருந்தும் என்றும் கொழும்புவில் உள்ள வீட்டிலிருந்தே பணிகளை கவனிக்க போவதாகவும் மந்திரிகளும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, அனுராதபுரம் அருகே பெட்ரோல் பங்கில் தட்டுப்பாடு காரணமாக விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், உரிமையாளரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வன்முறை நடக்கும் பகுதிகளில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என அந்நாட்டு மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்