< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் நேபாள நாட்டினர் 9 பேர் காயம்
|8 Oct 2023 6:07 AM IST
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு நேபாள வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
காத்மாண்டு,
இஸ்ரேல் நாட்டில் பணிபுரிந்த நேபாள நாட்டைச் சேர்ந்த 14 பேர் ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் சிக்கியுள்ளனர். அவர்களில் 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்திருக்கிறது.
இதுதொடர்பாக நேபாள வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தாக்குதலுக்கு கண்டனமும், இஸ்ரேலுக்கு ஆதரவும் தெரிவிப்பதாக கூறியுள்ளது.