நைஜீரியாவில் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதங்களுக்கு பிறகு அமைச்சரவை பட்டியல் அறிவிப்பு
|நைஜீரியாவில் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதங்களுக்கு பிறகு அமைச்சரவை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுஜா,
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதிபர் போலா டினுபு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் பதவியேற்று 3 மாதங்கள் ஆகியும் அங்கு அமைச்சரவை அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது அமைச்சரவை பட்டியலை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி நிதி மந்திரியாக வேல் எடுன், வெளியுறவுத்துறையில் யூசுப் துகர், பாதுகாப்பு துறைக்கு முகமது பதரு அபுபக்கர் மற்றும் போக்குவரத்து துறை மந்திரியாக அடேக்போயேகா ஓயெடோலோ ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களது பதவிப்பிரமாணம் விரைவில் நடைபெறும் என அதிபரின் செய்தித்தொடர்பாளர் அஜூரி என்கெலேலே தெரிவித்துள்ளார். அதிபர் போலா டினுபுவின் `தேசிய ஒற்றுமை மற்றும் திறன் கொண்ட அரசாங்கம்' என்ற வாக்குறுதி யின்படி எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க் களுக்கும் அங்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.