< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசரநிலை அமல்
|15 July 2023 11:53 PM IST
நைஜீரியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அவசர கால நிலையை அறிவித்து நைஜீரிய அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார்.
ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நைஜீரியா தனது வேளாண் துறையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, காலநிலை மாற்றம், பூச்சிகள் மற்றும் நோய் அச்சுறுத்தல்கள் போன்றவை அங்கு உணவு உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அங்கு கடந்த மே மாதத்தில் பணவீக்கம் 22.41 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. அங்கு உணவுப்பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்றது.
இந்தநிலையில் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நாட்டில் அவசர கால நிலையை அறிவித்து நைஜீரிய அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார்.