< Back
உலக செய்திகள்
நைஜீரியா:  கிறிஸ்தவ ஆலயத்தில் கூட்ட நெரிசல்; 31 பேர் பலி
உலக செய்திகள்

நைஜீரியா: கிறிஸ்தவ ஆலயத்தில் கூட்ட நெரிசல்; 31 பேர் பலி

தினத்தந்தி
|
28 May 2022 10:01 PM IST

நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர்.

லாகோஸ்,

நைஜீரியா நாட்டின் தென்கிழக்கே உள்ள போர்ட் ஹர்கோர்ட் நகரில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆலயத்தில் உணவு வழங்குகிறார்கள் என தெரிவித்த தகவலை தொடர்ந்து, சிறிய வாசல் வழியே அனைவரும் முண்டியடித்து கொண்டு செல்ல முயன்றுள்ளனர். இதில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் சிக்கி கொண்டனர். அவர்களில் பலர் சிறுவர் சிறுமிகள் ஆவர்.

இதுபற்றி மாகாண போலீசின் பெண் செய்தி தொடர்பாளர் இரிங்கே-கோகோ கூறும்போது, கூட்ட நெரிசல் ஏற்படும்போது, உணவு வழங்கும் திட்டம் தொடங்க கூட இல்லை. கதவு மூடப்பட்டு இருந்த போதிலும், நிகழ்ச்சி நடந்த பகுதியில் கூட்டத்தினர் கட்டுக்கடங்காமல் புகுந்தனர்.

இதில் நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்து உள்ளனர். 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்