< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது...!
|31 Dec 2023 4:52 PM IST
வாணவேடிக்கைகளுடன் 2024 ஆங்கில புத்தாண்டை நியூசிலாந்து மக்கள் வரவேற்றனர்.
வெலிங்டன்,
2023ம் ஆண்டின் கடைசி நாளான புத்தாண்டை வரவேற்க உலகமுழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல்வேறு நாடுகளில் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. புத்தாண்டை வரவேற்பதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2024 புத்தாண்டு பிறந்துள்ளது. வாணவேடிக்கைகளுடன் 2024 ஆங்கில புத்தாண்டை நியூசிலாந்து மக்கள் வரவேற்றனர். கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.