< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அகதிகளின் வருகை அதிகரிப்பால் அசாதரண சூழல்: நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்
|9 Oct 2022 3:26 AM IST
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் அகதிகளின் வருகை அதிகரிப்பால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பிறநாடுகளை சேர்ந்த அகதிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சமாளிக்கும் பொருட்டு மாகாண கவர்னர் எரிக் ஆடம்ஸ் அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆடம்ஸ், " செப்டம்பர் முதல், ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து முதல் ஆறு பேருந்துகள் நகரத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. நகரின் தங்குமிட அமைப்பில் வசிக்கும் ஒவ்வொரு ஐந்தில் ஒருவர் தற்போது புகலிடம் தேடுகிறார். வருபவர்களில் பலர் பள்ளியில் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படுபவர்களாக இருக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.