< Back
உலக செய்திகள்
ஆஸ்திரேலியாவில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்; இரவை பகலாக்கிய வான வேடிக்கை நிகழ்ச்சிகள்
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்; இரவை பகலாக்கிய வான வேடிக்கை நிகழ்ச்சிகள்

தினத்தந்தி
|
31 Dec 2022 7:16 PM IST

சிட்னி நகரில் காண்போரை வியக்க வைக்கும் வகையில் பிரம்மிப்பூட்டும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

சிட்னி,

உலகம் முழுவதும் 2023 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தற்போது புத்தாண்டு பிறந்துள்ளது. அங்குள்ள சிட்னி நகரில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும்.

இதைக் கண்டு ரசிப்பதற்காகவே உலகம் முழுவதும் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவிற்கு செல்கின்றனர். அந்த வகையில் இன்று சிட்னி நகரில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.

அங்கு 2023-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக வண்ண, வண்ண வான வேடிக்கைகளுடன் இரவை பகலாக்கும் வகையில் வானத்தில் ஒளி வெள்ளம் பரவியது. இதில் காண்போரை வியக்க வைக்கும் வகையில் பிரம்மிப்பூட்டும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதனைக் கண்டு ரசித்த மக்கள், தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு 2023-ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.



மேலும் செய்திகள்