< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாகிஸ்தான்-சீனா இடையே புதிய சரக்கு விமான போக்குவரத்து சேவை
|2 Jun 2024 6:05 AM IST
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து சீனாவின் குய்சோ நகருக்கு புதிய சரக்கு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுமுறை பயணமாக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சீனா செல்கிறார். அங்கு 5 நாட்கள் தங்கும் அவர் அதிபர் ஜின்பிங், பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து சீனாவின் குய்சோ நகருக்கு புதிய சரக்கு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. இது வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் சீனாவின் ஹூபே- பாகிஸ்தானின் லாகூர் இடையே நேரடி விமான சரக்கு போக்குவரத்து தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.