< Back
உலக செய்திகள்
ஹேக் செய்யப்பட்ட நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு - அதிர்ச்சி சம்பவம்
உலக செய்திகள்

ஹேக் செய்யப்பட்ட நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
16 March 2023 8:29 AM IST

நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

காத்மண்டு,

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல். நேபாள பிரதமருக்கு அதிகாரப்பூர்வ டுவிட்ட கணக்கு உள்ளது. பிஎம் நேபாளம் என்ற பெயரில் உள்ள அந்த டுவிட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.

நேபாள பிரதமரின் டுவிட்ட கணக்கு ஹேக் செய்யப்பட்டு டுவிட்டர் முகப்பு புகைப்படம் மற்றும் முகப்பு முன்னுரை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. முகப்பு பக்கத்தில் புரோபைல் புகைப்படமாக புஷ்ப கமல் தாஹல் புகைப்படம் இருந்த நிலையில் அது ஹேக்கர்களால் மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹேக் பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்