< Back
உலக செய்திகள்
பானிபூரி விற்பனைக்கு திடீர் தடை..! வருத்தத்தில் உணவுப் பிரியர்கள்
உலக செய்திகள்

பானிபூரி விற்பனைக்கு திடீர் தடை..! வருத்தத்தில் உணவுப் பிரியர்கள்

தினத்தந்தி
|
28 Jun 2022 8:18 PM IST

காலரா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரவி வருவதால், பானிபூரி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு,

நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் காலரா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரவி வருவதால், பானிபூரி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் காலரா நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 12 பேருக்கு காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், உணவகங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்த‌து. அப்போது, லிலித்பூர் மாநகராட்சி பகுதியில், பானிபூரியுடன் வழங்கப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ல‌லித்பூர் மாநகராட்சியில் பானிபூரி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு போன்ற காலரா அறிகுறி தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள சுகாதார நலையத்திற்கு செல்லுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.


மேலும் செய்திகள்