< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பிறக்கும் குழந்தைகளுக்கு பரவும் நோய் - 7 சிசுக்களுக்கு நேர்ந்த கதி
|20 May 2023 10:25 PM IST
பிரிட்டனில் இதய தொற்று நோயால் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மேலும் 7 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்,
பிரிட்டனில் இதய தொற்று நோயால் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மேலும் 7 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு வேல்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதயத்தில் இறுக்கம், வீக்கம், அழற்சியை ஏற்படுத்தும் மயோர்கார்டிடிஸ் நோய் பாதிப்பு கடந்த ஒரு வருடமாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டு வருகிறது.
வேல்சில் 10 குழந்தைகளுக்கும், இங்கிலாந்தில் 5 குழந்தைகளுக்கும் மயோர்கார்டிடிஸ் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களில் 9 பேருக்கு என்டோவைரஸ் வைரஸ் இருப்பது உறுதியானது. இந்த வைரஸ் சுவாச நோய், கை, கால் மற்றும் வாய் தொடர்பான நோய்கள், மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.