< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பிலிப்பைன்சில் பயங்கரம்: கவர்னர் சுட்டு கொலை
|5 March 2023 3:51 AM IST
பிலிப்பைன்ஸ் நாட்டில் நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாண கவர்னர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாணத்தின் கவர்னரான 2011-ம் ஆண்டு முதல் இருந்து வந்தவர் ரோயல் டெகாமோ.
இவர் நேற்று தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகரில் மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு ராணுவ உடையில் சில மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வந்திறங்கினர். அவர்கள் தங்களது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் கவர்னர் ரோயல் டெகாமோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர். பொது நிகழ்ச்சியின்போது கவர்னர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பிலிப்பைன்சில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.