எதிர்மறை செய்திகளால் இலங்கை சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு
|எதிர்மறை செய்திகளால் இலங்கை சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொழும்பு,
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுற்றுலாத்துறையை பெருமளவில் பாதித்து இருக்கிறது. இதை வளர்ச்சிப்பாதைக்கு திருப்ப அரசும், சுற்றுலாத்துறையும் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இலங்கை குறித்த எதிர்மறை செய்திகளால் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி வேகமெடுக்கவில்லை என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.
'இலங்கையில் உணவு தட்டுப்பாடு நீடிக்கிறதா?', 'குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைக்கவில்லையா?' என்பது போன்ற கேள்விகளையே வெளிநாட்டு சுற்றுலா நிறுவனங்கள் எழுப்பி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த எதிர்மறை தகவல்கள் மற்றும் கருத்துகளை போக்கவும், உள்நாடு-வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியபோதும் இந்த நிலை மேம்படவில்லை என அவர்கள் கூறியிருப்பதாக டெய்லி மிரர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதற்கிடையே இலங்கையில் அதிகமான வரி விதிப்பு காரணமாக மதுபானங்களின் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. இதனால் மது விற்பனை கணிசமாக சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 20 முதல 30 சதவீதம் வரை மது விற்பனை சரிந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.