< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 14 பேர் பலியான சோகம்..!
|15 Oct 2022 2:44 AM IST
துருக்கியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இஸ்தான்புல்,
வடக்கு துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடித்த வெடிப்பு காரணமாக கிட்டத்தட்ட 50 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் பூமிக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் சிக்கிக்கொண்டனர்.
இதில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பூமிக்கடியில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியே கொண்டுவருவதற்கான மீட்புப் பணிகளை மேற்கொள்ள துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடனடியாக தனது உள்துறை மற்றும் எரிசக்தி மந்திரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பினார்.
எட்டு சுரங்கத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து தாங்களாகவே வெளியே வந்ததாகவும், தற்போது அவர்கள் மருத்துவ உதவி பெற்று வருவதாகவும் அவர் கூறினார். சுரங்கத்தில் மீத்தேன் வாயு உருவானதே இந்த வெடி விபத்துக்கு காரணம் என்று சுரங்கத்தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.