< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
கடற்படை மாலுமி உயிரிழப்பு; இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு
|27 Jun 2024 7:44 PM IST
கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த 24-ந்தேதி இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்து, அவர்களின் படகை பறிமுதல் செய்தனர். இந்த கைது நடவடிக்கையின்போது இந்திய மீனவர்கள் தப்ப முயன்றதாகவும், அப்போது இலங்கை கடற்படை மாலுமி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீதும், எல்லை தாண்டி மீன் பிடித்தது மற்றும் இலங்கை கடற்படை உபகரணங்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக காங்கேசன்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.