< Back
உலக செய்திகள்
நேட்டோ நாடுகள் உச்சி மாநாடு இன்று தொடக்கம்: உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா?
உலக செய்திகள்

நேட்டோ நாடுகள் உச்சி மாநாடு இன்று தொடக்கம்: உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா?

தினத்தந்தி
|
29 Jun 2022 4:04 PM IST

நேட்டோ தலைவர்கள் கூட்டணியில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.

மேட்ரிட்,

ஜெர்மனியின் 7 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஜி 7 நாடுகளின் 3 நாள் மாநாடு நடைபெற்றது. அதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக கூறப்பட்டாலும் உக்ரைனுக்கு ஆதரவு திரட்டும் கூட்டமாகவே நடைபெற்றுள்ளது. ஜி7 கூட்டம் முடிவடைந்த நிலையில் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஸ்பெயினில் இன்று தொடங்குகிறது.

நேட்டோ தலைவர்கள் கூட்டணியில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.

நேட்டோ கூட்டமைப்பின் மாநாடு தொடங்கும் முன்னர் பேசிய நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், நேட்டோ கூட்டணியை மாற்றுவதற்கும் அதன் குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை கோடிட்டுக் காட்டினார். இந்த புதிய முடிவுகள், ஒரு புதிய மூலோபாயக் கருத்தை உள்ளடக்கியிருக்கும், அதாவது 'அதிக போட்டி மற்றும் ஆபத்தான உலகில் நேட்டோவை எவ்வாறு எதிர்காலத்தில் கொண்டு செல்வது என்பதற்கான வரைபடமாக இருக்கும்' என்றார்.

இந்த ஆண்டு நேட்டோ உச்சிமாநாட்டில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளை நேட்டோ உறுப்பினராக சேர்ப்பது முக்கிய அம்சமாக இருக்கும்.

மறுபுறம், நேட்டோ உறுப்புரிமையை விட ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான முனைப்பில் உக்ரைன் லட்சியமாக கொண்டுள்ளது..

இந்த மாநாட்டிலும் உக்ரைன் பற்றி தான் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. ஆனாலும், நேட்டோவை கிழக்கு வரை விரிவாக்கம் செய்யும் வகையில் படைகளின் எண்ணிக்கையை 3 லட்சமாக உயர்த்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதான் ரஷியாவை மேலும் சீண்டும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் மேலும் உக்கிரமடையும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்