< Back
உலக செய்திகள்
சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் செல்லும் நாசாவின் பார்க்கர் விண்கலம்

Image Courtesy : @NASASun twitter

உலக செய்திகள்

சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் செல்லும் நாசாவின் 'பார்க்கர்' விண்கலம்

தினத்தந்தி
|
8 July 2023 10:06 PM IST

‘பார்க்கர்’ விண்கலம் அடுத்த மாதம் 4.5 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் செல்ல இருக்கிறது.

வாஷிங்டன்,

பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் ஆற்றலுக்கான ஆதாரமாக விளங்கும் சூரியனை ஆய்வு செய்வதற்கு நீண்ட காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சூரியனை மிக அருகில் சென்று ஆராயும் வகையில் 'பார்க்கர்' என்ற விண்கலத்தை கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ந்தேதி விண்ணில் ஏவியது.

சூரியனில் இருந்து வெளிவரும் வெப்ப புயலுக்கான ஆதாரம், காந்த அலை செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆராய அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கடந்த ஜூன் 27-ந்தேதி 5.3 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் சென்றதாக நாசா தெரிவித்துள்ளது. இதுவரை சூரியனை நெருங்கிச் சென்றதிலேயே மிக நெருக்கமான தூரம் இது என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து அடுத்த மாதம் 21-ந்தேதி வீனஸ் கிரகத்தின் ஈர்ப்பு சக்தியோடு 'பார்க்கர்' விண்கலம் 4.5 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் செல்ல இருக்கிறது. தற்போது சூரியனின் வெப்ப அலை பகுதியை நெருங்கிய போதும் பாதிப்பின்றி செயல்பட்டு வரும் இந்த விண்கலம், அடுத்த மாதம் 4.5 மில்லியன் மைல் அருகில் சென்றும் பிரச்சினை இன்றி செயல்பட்டால், சூரியனின் ஆற்றலுக்கான ஆதாரம் மற்றும் செயல்பாடுகளை அறிய முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்