< Back
உலக செய்திகள்
ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி எடுத்த வியாழன் கோளின் புகைப்படத்தை வெளியிட்டது நாசா

image tweeted by @ESA_Webb

உலக செய்திகள்

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி எடுத்த வியாழன் கோளின் புகைப்படத்தை வெளியிட்டது நாசா

தினத்தந்தி
|
23 Aug 2022 10:44 AM GMT

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான வியாழன் கோளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்தது.

வாஷிங்டன்,

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியை விண்ணில் ஏவியது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. பிரபஞ்சத்தின் தொடக்க கால படங்கள், விண்மீன் திரள்கள் படங்கள் வெளியிடப்பட்டன.

இதற்கிடையே சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான வியாழன் கோளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்தது. இந்தநிலையில் இந்த புகைப்படங்களின் குறிப்பிட்ட அம்சங்களை தனித்து காட்டும் வகையில் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதில் புவியின் வட, தென் துருங்களில் ஏற்படும் அரிய நிகழ்வான அரோரா வியாழன் கோளிலும் நிகழ்வது படம் பிடிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்