சர்வதேச விண்வெளி நிலையத்தில் பழுதடைந்த சோலார் தகடுகளை மாற்றி நாசா விண்வெளி வீரர்கள் புதிய சாதனை
|சர்வதேச விண்வெளி நிலையத்தில் பழுதடைந்த சோலார் தகடுகளை நாசா விண்வெளி வீரர்கள் 2 பேர் இணைந்து சரிசெய்து அசத்தியுள்ளனர்.
வாஷிங்டன்,
சர்வதேச விண்வெளி நிலையத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் மாதக்கணக்கில் தங்கி இருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் அங்கு ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைகளை, தரைக்கட்டுப்பாட்டு தளத்தின் உதவியுடன் விண்வெளி வீரர்கள் தாங்களே சரிசெய்து கொள்கின்றனர்.
அந்த வகையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பழுதடைந்த சோலார் தகடுகளை நாசா விண்வெளி வீரர்கள் 2 பேர் இணைந்து சரிசெய்து அசத்தியுள்ளனர். இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள தகவலின்படி ஜோஷ் கசாடா, பிராங்க் ரூபியோ ஆகிய 2 விண்வெளி வீரர்களும் தங்களது பாதுகாப்பு கவச உடைகளை அணிந்தவாறு சென்று, ஸ்டார்போர்டு டிரஸ் என்ற அமைப்பில் சூரிய தகடுகளை பொருத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Can we fix it? Yes, we can
— NASA (@NASA) December 3, 2022
Astronauts Josh Cassada and Frank Rubio have successfully installed Roll-Out Solar Array on the starboard truss structure of the @Space_Station. They have also disconnected a cable allowing restoring a power channel to 75% of its operating capacity. pic.twitter.com/zjBMzACmn0