< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் பிரபல பல்கலை கழகத்தின் வளாகத்தில் மாணவர் மர்ம மரணம்
உலக செய்திகள்

அமெரிக்காவில் பிரபல பல்கலை கழகத்தின் வளாகத்தில் மாணவர் மர்ம மரணம்

தினத்தந்தி
|
5 Oct 2022 5:29 PM GMT

அமெரிக்காவில் பல்கலை கழகத்தின் வளாகத்தில் வருண் மணீஷ் என்ற மாணவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.



இண்டியானா,


அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் வருண் மணீஷ் செட்டா (வயது 20). இவருடன் கொரியாவை சேர்ந்த ஜி மின் ஜிம்மி ஷா (வயது 22) என்பவர் ஒன்றாக அறையில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை ஷா போலீசாருக்கு போன் செய்து வருண் மரணம் அடைந்து கிடக்கிறார் என தகவல் தெரிவித்து உள்ளார். இந்த வழக்கில் போலீசார், சந்தேகத்தின் பேரில் ஷாவை கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி காவல் துறை முழு அளவில் விசாரணை நடத்தி வருகிறது. போலீசார், கொலை என்றே வழக்கை விசாரித்து வருகின்றனர். அந்த மாணவர் முதல் தளத்தில் தனது அறையில் இறந்து கிடந்து உள்ளார்.

எனினும், அவர் எப்படி இறந்து போனார் என்பதற்கான தகவல் எதுவும் தெரிய வரவில்லை. அந்த பல்கலை கழகத்தின் வலைதளத்தின் தகவலின்படி, 50 ஆயிரம் மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். சம்பவம் நடந்த பின்னர் போலீசாருக்கு தகவல் வந்தபோது, ஷா மற்றும் செட்டா என இருவரே அறையில் இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பல்கலை கழகத்தின் தலைவர் மிட்ச் டேனியல்ஸ் இரங்கல் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட நபர்களோடு எங்களது மனதும், எண்ணங்களும் செல்கின்றன என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்