< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இங்கிலாந்தில் கேரள நர்ஸ் 2 குழந்தைகளுடன் படுகொலை: கணவர் கைது
|18 Dec 2022 2:00 AM IST
இங்கிலாந்தில் கேரள நர்ஸ் 2 குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
லண்டன்,
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சு (வயது 35). இவர் தனது கணவர் அசோக் (52), குழந்தைகள் ஜீவா சஜு (6), ஜான்வி சஜுவுடன் (4) இங்கிலாந்து நார்த்தாம்ப்டன்ஷயரில் உள்ள கெட்டெரிங் நகரில் வசித்துவந்தார். அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக அஞ்சு பணிபுரிந்தார். அசோக், ஓட்டல் ஒன்றில் டெலிவரி நபராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கெட்டெரிங் நகரில் உள்ள வீட்டில் நர்ஸ் அஞ்சுவும், அவரது இரு குழந்தைகளும் படுகாயங்களுடன் கிடப்பதாக அருகில் உள்ள சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்றபோது, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அஞ்சு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் இருவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக அஞ்சுவின் கணவர் அசோக்கை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.