< Back
உலக செய்திகள்
மும்பை பயங்கரவாத தாக்குதல்... ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம்:  இங்கிலாந்துக்கான இந்திய தூதர்
உலக செய்திகள்

மும்பை பயங்கரவாத தாக்குதல்... ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம்: இங்கிலாந்துக்கான இந்திய தூதர்

தினத்தந்தி
|
29 Nov 2023 10:22 AM IST

இங்கிலாந்து நாட்டு எம்.பி.க்கள் கேத்தரீன் வெஸ்ட், விரேந்திர சர்மா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள இந்தியா ஹவுசில், காந்தி ஹாலில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்து கொண்ட இங்கிலாந்து நாட்டு எம்.பி.க்கள் கேத்தரீன் வெஸ்ட், விரேந்திர சர்மா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில், இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசும்போது, இதுபோன்ற பயங்கர செயல்களை, கடந்த காலத்திலும், இப்போதும் மற்றும் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம். அவை திரும்பவும் நடைபெறாத வகையில் உறுதி செய்யப்படும் என்பதே இந்தியாவின் அணுகுமுறை என்று அவர் வலியுறுத்தி கூறியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்கள் ஒருபோதும் மீண்டும் நடைபெறாது என்பது ஒரு கொள்கையாகவே உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காக, கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா நிறைய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதுபோன்ற பயங்கரவாத செயல்களை நாங்கள் ஏற்று கொள்ளமாட்டோம் என்பதே உலகிற்கான எங்களுடைய ஒரு தெளிவான செய்தியாக இருக்கும் என்று அவர் பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்