< Back
உலக செய்திகள்
ஜெர்மனி: மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி
உலக செய்திகள்

ஜெர்மனி: மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி

தினத்தந்தி
|
10 March 2023 12:26 PM IST

ஜெர்மனியில் மதவழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.

பெர்லின்,

ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்தில் பிரார்த்தனை,ஆலோசனை கூடம் உள்ளது.

இந்நிலையில், இந்த வழிபாட்டு தலத்திற்குள் நேற்று இரவு 9.15 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்