மெக்சிகோவில் நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதல்; 9 பேர் உயிரிழப்பு
|மெக்சிகோவின் தெற்கே ஒரே நேரத்தில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டின் தெற்கே குர்ரிரோ கோஸ்டா கிராண்ட் பகுதியில் அகாபல்கோ-ஜிகுவாதனிஜோ நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றை தனியார் வாகன ஓட்டுனர் ஒருவர் முந்தி செல்ல முயன்றுள்ளார்.
எனினும், சரக்கு வாகனத்தின் பின்புறம் இவரது கார் மோதி உள்ளது. இதில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இவரது வாகனம் சாலையில் எதிர்பக்கம் உள்ள பகுதிக்கு சென்றுள்ளது.
இதனை தொடர்ந்து, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்திற்குள்ளானது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து, மாகாண போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அதோயக் டி ஆல்வாரிஜ் என்ற நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், ஒரு மணிநேரம் வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.