< Back
உலக செய்திகள்

உலக செய்திகள்
அமெரிக்காவில் தாய், மகள் சுட்டுக்கொலை

9 March 2024 5:42 AM IST
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் வொர்செஸ்டர் பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரில் சிறுமியுடன் அவரது தாயும் இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மர்மநபர்கள் திடீரென கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் அந்த சிறுமி, தாய் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் அந்த காரை சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.