< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ரஷியா மீது உக்ரைனின் தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு
|23 Jan 2024 5:14 AM IST
ரஷியாவின் டோனெட்ஸ்க் நகரில் உள்ள சந்தை மீது உக்ரைன் சரமாரி பீரங்கி தாக்குதல் நடத்தியது.
கீவ்,
உக்ரைன்-ரஷியா போர் சுமார் 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இந்த போரில் இரு நாடுகளும் மாறிமாறி டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபடுகின்றன. அதன்படி ரஷியாவின் டோனெட்ஸ்க் நகரில் உள்ள சந்தை மீது உக்ரைன் சரமாரி பீரங்கி தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்ததாகவும், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் தற்போது பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அங்கு ஒரு நாள் துக்க தினமாக அனுசரிக்கப்பட்டது.
அப்போது உக்ரைன் தாக்குதலில் பலியானவர்களுக்கு அந்த சந்தை அருகே பொதுமக்கள் பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனிடையே இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.