< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
300க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழப்பு... உண்மையை மறைக்கும் ரஷியா... - பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
|29 Jan 2023 5:51 PM IST
ரஷியா உண்மைத் தகவலை மறைத்து விட்டதாகவும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 300ஐத் தாண்டும் என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லண்டன்,
உக்ரைனின் மகீவ்கா நகரில் அந்நாட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட நிலையில், உக்ரைனிய படைகளும் எதிர்த் தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு தரப்புமே உயிர் சேதங்களை சந்தித்துள்ள நிலையில், மகீவ்கா நகரில் கடந்த 1ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 89 ரஷிய வீரர்கள் பலியானதாக ரஷியா தெரிவித்திருந்தது.
ஆனால் ரஷியா உண்மைத் தகவலை மறைத்து விட்டதாகவும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 300ஐத் தாண்டும் என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.