< Back
உலக செய்திகள்
உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையை கைவிட்டது ஜப்பான் அரசு
உலக செய்திகள்

உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையை கைவிட்டது ஜப்பான் அரசு

தினத்தந்தி
|
1 Jan 2024 9:56 PM IST

கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத்திரும்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டோக்கியோ,

ஜப்பான், வடக்கு பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் பதிவானது.

மேலும் ஜப்பானின் கடற்கரையோர நகரங்களான பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் கடற் பகுதியில் மிக மோசமான சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையை கைவிட்டது ஜப்பான் அரசு. இருப்பினும் பள்ளமான பகுதிகளில் உள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத்திரும்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்