நாசாவின் ஆர்டெமிஸ் ராக்கெட் நிலவுக்கு ஏவுவது மீண்டும் ஒத்திவைப்பு
|ராக்கெட் மீண்டும் 27 ஆம் தேதி ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், புயல் காரணமாக ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969-ல் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு விண்வெளி ஆராய்ச்சில் ஈடுபட்டு வரும் நாசா, தற்போது மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, 'ஆர்டெமிஸ்' திட்டத்தை துவங்கியுள்ளது.
2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்டெமிஸ் - 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான, 'ஓரியன்' விண்கலத்தை சுமந்து செல்கிறது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆர்டெமிஸ் - 1 ராக்கெட் ஏவப்படுவதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு முறை ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, ராக்கெட் மீண்டும் 27 ஆம் தேதி ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், புயல் காரணமாக ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்த ராக்கெட்டை மீண்டும் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.