< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
12 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு காய்ச்சல்
|23 May 2022 4:31 AM IST
12 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெனீவா,
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகள் பலவற்றில் 'மங்கி பாக்ஸ்' என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் நோய் பரவி வருகிறது.
21-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 12 நாடுகளில் 92 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 28 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு சந்தேகிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. இதுவரை இந்த பாதிப்புக்குள்ளானோர் யாரும் பலியாகவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
குரங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானோருடன் நேரடியாக உடல்ரீதியிலான தொடர்பு கொண்டவர்கள், அறிகுறிகளை கொண்டிருந்தால் அவர்கள் அதிக ஆபத்தில் இருப்பவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.