< Back
உலக செய்திகள்
குரங்கு அம்மை அபாயங்களை தீவிரமாக எடுத்துக் கொண்டால் அதை தடுக்க முடியும் - உலக சுகாதார அமைப்பு

Image Courtesy : AFP 

உலக செய்திகள்

குரங்கு அம்மை அபாயங்களை தீவிரமாக எடுத்துக் கொண்டால் அதை தடுக்க முடியும் - உலக சுகாதார அமைப்பு

தினத்தந்தி
|
28 July 2022 10:08 AM GMT

தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் தொற்று பரவுவதை நிறுத்தலாம் என டெட்ரோஸ் கூறினார்.

டோக்கியோ,

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குரங்கு அம்மை நுழைந்துள்ளது.

இதுவரை 78 நாடுகளில் 18,000 க்கும் மேற்பட்டடோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன் குரங்கு அம்மையை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்து இருந்தது.

அதிகரித்து வரும் பாதிப்புகளுக்கு மத்தியில் மத்தியில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், உலகம் குரங்கு அம்மை அபாயங்களை தீவிரமாக எடுத்துக் கொண்டால், அதனை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நாடுகள், சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் குரங்கு அம்மை அபாயங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான நடவடிக்கைகளை எடுத்தால், நிச்சயம் குரங்கு அம்மை பரவுவதை நிறுத்தலாம் " என்று டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மையால் ஐரோப்பாவும் அமெரிக்காவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதானோம் கூறினார். தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீத பேர் இந்த இரண்டு பகுதிகளிலும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

குரங்கு அம்மை நோய் குறித்த தவறான தகவல்கள் இணையத்தில் வேகமாகப் பரவி தீங்கு விளைவிப்பதை தடுக்க சமூக ஊடக தளங்கள், மற்றும் செய்தி நிறுவனங்களுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்