< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி!
|21 Aug 2022 2:39 PM IST
இந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் முதன்முறையாக குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அண்டை நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதியானது. அங்கு ஆகஸ்ட் 5ம் தேதி வரை 15 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதேபோல் தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.