< Back
உலக செய்திகள்
டேட்டிங் செய்ய ஏஐ குளோனிங் கவர்ச்சி மாடல்...! நிமிடத்திற்கு ரூ.80, குவிந்த ஆண்கள்...!
உலக செய்திகள்

டேட்டிங் செய்ய ஏஐ குளோனிங் கவர்ச்சி மாடல்...! நிமிடத்திற்கு ரூ.80, குவிந்த ஆண்கள்...!

தினத்தந்தி
|
11 May 2023 4:02 PM IST

கிட்டத்தட்ட தற்சமயம் வரை நான்கில் ஒரு பங்கு வேலைவாய்ப்புகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மாயமாய் மறைந்துள்ளன.

வாஷிங்டன்:

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்பது தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமான வார்த்தைகளில் ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு என்பது கணினி, கணினியால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது மென்பொருளை மனித மனதைப் போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்க வைக்கும் செயல்முறையாகும்.

மனித மூளையின் வடிவங்களைப் படிப்பதன் மூலமும், அறிவாற்றல் செயல்முறையை பகுப்பாய்வு செய்வதன் மூலமும் இது நிறைவேற்றப்படுகிறது. இந்த ஆய்வுகளின் விளைவாக அறிவார்ந்த மென்பொருள் மற்றும் அமைப்புகளை உருவாக்குகிறது.

இந்த தொழில்நுட்பத்தால் ஏற்கனவே ஏற்பட்ட தீங்குகளையும், இனி வர இருக்கும் ஆபத்துக்களையும் நினைவில் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட தற்சமயம் வரை நான்கில் ஒரு பங்கு வேலைவாய்ப்புகள் இதனால் மாயமாய் மறைந்துள்ளன.

இந்த ஏஐ தொழில்நுட்பத்தை இங்கே மக்கள் பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றன. இந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் படங்கள் பல நேரங்களில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் இதுபோன்ற படங்கள் உண்மை என்றே நம்பிவிடுகிறார்கள். அந்தளவுக்குத் ஏஐ படங்கள் இருக்கிறது. நாம் ஏஐ படங்கள் சொல்லவில்லை என்றால் இது அசல் படம் என்றும் நம்பும் அளவுக்கே இருக்கிறது.

இந்த் நிலையில் இணையத்தில் பிரபலமாக உள்ள ஒரு பெண் செயற்கை நுண்ணறிவு மூலம் படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் இந்த பிரபலம் 1,000 பாய் பிரண்ட்களை பெற்றுள்ளார். இதனிடையே அவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தன்னை தானே குளோன் செய்துள்ளார்.

மேலும், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அந்த குளோனை டாட்டிங் செய்ய நிமிடத்திற்கு ஒரு டாலர் (ரூ. 80) வசூலிக்கவும் செய்கிறாராம். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கம்மிங்கைச் சேர்ந்தவர் கேரின் மார்ஜோரி(23) ஸ்னாப்சாட் தளத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமான பலோயர்ஸ்களை கொண்டிருக்கிறார்.

அவரது பல பலோயர்யஸ்கள் அவர் மீது அதீத அன்பை வைத்துள்ளனர். அனைவரும் கேரின் மார்ஜோரி உடன் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் பலோயர்ஸ்கள் பலரும் சோகமடைந்து விடுவார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வைக் கொண்டு வந்துள்ள அவர், இதற்காகத் தனது பலோயர்ஸ்கள் தன்னை டேட்டிங் செய்ய அனுமதிக்கும் ஒரு ஏஐ குளோனை உருவாக்கினார்.

அவர் கெரின்ஏஐ என்ற ஏஐ தளத்தைப் பயன்படுத்திப் படத்தை உருவாக்கியுள்ளார். இவர் இந்த ஏஐ உடன் பல ஆயிரம் மணி நேரம் பேசி, தன்னை போலவே சிந்திப்பது போன்ற ஏஐ கருவியை உருவாக்கியுள்ளார். இந்த மாடலின் ஏஐ குளோன் அனைத்து விஷயங்கள் குறித்தும் டேட்டிங் செய்யும் நபருடன் பேசுமாம். உடலுறவு உட்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் இந்த குளோன் மாடல் பேசும் வகையில் உருவாக்கியுள்ளார்.

ஒருவருக்கு எப்போது தேவையோ அப்போது கட்டணம் செலுத்தி இந்த குளோன் மாடலுடன் டேட் செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு டாலர் அதாவது 80 ரூபாயைக் கட்டணமாக வசூலிக்கிறார். இப்படி எல்லாம் கட்டணம் செலுத்தி யார் டேட்டிங் செய்வார் என்று நினைக்க வேண்டாம். இப்போதே சுமார் ஆயிரம் பாய் பிரண்ட்கள் அந்த குளோன் மாடலை டேட் செய்கிறார்களாம்.

இது குறித்து அவர் கூறுகையில், "உங்களுக்கு ஆறுதலாகவோ அல்லது அன்பாகவோ இருக்க யாரேனும் தேவைப்பட்டால். பள்ளியில் அல்லது பணியிடத்தில் நடந்த ஏதாவது ஒன்றைப் பற்றி நீங்கள் பகிர விரும்பினாலும், எனது குளோன் ஏஐ எப்போதும் உங்களுக்காக இருக்கும்" என கூறி உள்ளார்.

இந்த குளோன் உடன் டேட்டிங் செய்பவர்கள் 99 சதவீதம் ஆண்கள் தானாம். இந்த ஏஐ போட் சில நாட்களில் ரூ 58.7 லட்சம் சம்பாதித்துள்ளது. தனது 18 லட்சம் பாலோயர்ஸ்களில் 20,000 பேர் பின்தொடர்ந்தாலே ஒரு மாதத்திற்கு 50 லட்சம் டாலரை சம்பாதிக்க முடியும் என்கிறார் அவர். இதற்காக பாரெவர் என்ற வாய்ஸ் தொழில்நுட்பத்தை அவர் பயன்படுத்தியுள்ளார்.

2017இல் உயிரிழந்த தனது தந்தையின் நினைவாக அவரது குரலை பாரெவர் என்ற நிறுவனம் மூலம் உருவாக்கினார் அதன் நிறுவனர் ஜான் மேயர். இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் ஆடியோ வீடியோக்களை ஆய்வு செய்து குரலைத் தத்ரூபமாக உருவாக்க முடியும். இப்போது அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தான் கேரின் மார்ஜோரி தனது ஏஐ குளோனிற்கான வாய்ஸை உருவாக்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்