செல்போன்கள் முதலில் மனிதர்களை கெடுத்தன; இப்போது நாய்கள்.. வைரலாகும் வீடியோ
|வளர்ப்பு நாய், சொகுசு மெத்தையில் ஹாயாக படுத்துக்கொண்டு ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ள செல்போனில் படம் பார்க்கிறது.
செல்லப்பிராணிகள் தங்கள் எஜமானரிடம் பாசமாகவும் விசுவாசமாகவும் இருப்பதுடன், அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கின்றன. சில சமயம் எஜமானரின் செயல்களை அப்படியே காப்பியடித்து வியக்க வைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு செல்லப்பிராணி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
அனிமல் லவ்வர் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் வார இறுதி நாட்களை இப்படித்தான் கழிப்பார்களா? என்ற கேள்வியுடன் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், வளர்ப்பு நாய் தனது சொகுசு மெத்தையில் ஹாயாக படுத்துக்கொண்டு ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ள செல்போனில் படம் பார்க்கிறது.
மனிதர்கள் ஓய்வு நேரத்தில் ரிலாக்சாக படுத்துக்கொண்டு செல்போன் பார்ப்பது வழக்கம். அதையே இந்த வளர்ப்பு நாய் காப்பியடித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை, இதுவரை 94 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சுமார் 28 ஆயிரம் பேர் கமென்ட் செய்துள்ளனர். அதில் ஒருவர் தெரிவித்த கருத்து அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. "செல்போன்கள் முதலில் மனிதர்களை கெடுத்தன, இப்போது நாய்கள்" என்று அந்த பயனர் கருத்து பதிவிட்டிருந்தார். அவரது கருத்தை 4,500-க்கும் மேற்பட்ட பயனர்கள் ஆமோதித்து லைக் செய்துள்ளனர்.
நாம் நாய்குட்டியாக மறுபிறவி எடுத்தால் இப்படித்தான் இருப்போம் என மற்றொருவர் தெரிவித்திருந்தார்.
நாய்களுக்கு எல்லாம் தெரியும் என்று நான் தினமும் நினைக்கிறேன். ஆனால் அவை ஒன்றும் தெரியாதது போன்று பாசாங்கு செய்கின்றன என ஒருவர் கூறியிருந்தார். என்னங்க இது..? இந்த நாய் இனி நாயாக இருக்காது என ஒருவர் ஆச்சரியத்துடன் தெரிவித்திருந்தார்.