< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தான்சானியாவில் லாரி மீது மினி பஸ் மோதி 6 பேர் சாவு
|15 July 2023 4:27 AM IST
எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது மினி பஸ் நேருக்கு நேர் மோதியது.
டோடோமா,
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் கஹாமா பகுதியில் இருந்து நயகனாசிக்கு மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள கெய்ட்டா பகுதி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை மினி பஸ் இழந்தது.
இதனால் எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது மினி பஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். காயம் அடைந்த இருவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.