அமெரிக்காவில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் மில்லியன் கணக்கானோர் - டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு
|நேர்மையான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
நியூ ஹாம்ப்ஷயர் [அமெரிக்கா],
வலுவான எல்லைகள் கொண்ட தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், மில்லியன் கணக்கான மக்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவதாகக் கூறினார்.
இதுதொடர்பாக நியூ ஹாம்ப்ஷயரின் லண்டன்டெரி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "நம்மிடம் நேர்மையான, நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்கள் வேண்டும். மேலும் வலுவான எல்லைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நமக்கு எல்லைகள் மற்றும் தேர்தல்கள் இல்லையென்றால், நமக்கு நாடு இல்லை. எல்லையில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். எல்லையில் இதுபோன்ற எதுவும் இதுவரை நடந்ததில்லை.
மில்லியன் கணக்கான மக்கள் சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைகிறார்கள். பலர் சிறைகளில் இருந்து வருகிறார்கள். நிறைய பயங்கரவாதிகள் வருகிறார்கள். அவர்கள் மனநல நிறுவனங்களிலிருந்து வருகிறார்கள்... இது மிகவும் மோசமானது" என்று அவர் கூறினார்
வடக்கு எல்லைகளின் நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜோ பைடன் நிர்வாகம் வரலாற்றில் "மோசமான" வேலைகளில் ஒன்றைச் செய்துள்ளது. இது நாட்டின் வரலாற்றில் "மோசமான துயரங்களில்" ஒன்றாகும். வட எல்லையில் நிலைமை மோசமாகி வருகிறது...இரண்டு எல்லையையும் பார்க்க வேண்டும். தெற்கு எல்லை இதுவரை யாரும் பார்த்திராதது, நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான அவலங்கள். ஒன்று அவர்கள் மிகவும் முட்டாள்கள் அல்லது அவர்கள் எங்கள் நாட்டை வெறுக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.