மெக்சிகோவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி
|மெக்சிகோ நாட்டில் முதன் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மெக்சிகோ,
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் வெளிநாடுகள் பலவற்றில் 'மங்கி பாக்ஸ்' என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் நோய் பரவி வருகிறது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மெக்சிகோ நாட்டில் முதன் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபா் அமொிக்கா குடியுாிமை பெற்று அங்கு வசித்து வருகிறாா். அவா் சமீபத்தில் நெதா்லாந்து சென்று வந்தாா். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சகமும் உறுதிசெய்துள்ளது. தற்போது அவர் முழு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்த குரங்கு அம்மை நோய் பாதிப்பு 20 நாடுகளில் 200 க்கும் மேற்பட்டவர்களிடம் கண்டறியப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாக கூறப்படுகிறது.