< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ரஷியா: பெட்ரோல் பங்கில் பயங்கர வெடி விபத்து - 35 பேர் பலி
|15 Aug 2023 5:58 PM IST
ரஷியாவில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
மாஸ்கோ,
ரஷியாவின் தெற்கு பகுதியில் டகிஸ்டன் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகர் மக்ஹச்கலா நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பெட்ரோல் நிலையம் அருகே இருந்த கார் பழுதுபார்க்கும் கடையில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பெட்ரோல் பங்க் மீது பரவியது.
இதனால், பெட்ரோல் பங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். மேலும், 115 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.