< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
மெக்சிகோவில் உணவு வினியோக நிறுவனம் மீது வெடிகுண்டு வீச்சு; 9 பேர் பலி
|12 July 2023 2:48 AM IST
மெக்சிகோவில் உணவு வினியோக நிறுவனம் மீது வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவத்தில் 9 பேர் பலியாகினர்.
மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோவின் மத்திய மெக்சிகோ மாகாணம் டொலுகா நகரில் மொத்த உணவு வினியோக நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இங்குள்ள ஊழியர்கள் வழக்கம்போல் சமைத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டை வீசினர். இதில் அந்த நிறுவனம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
இதனையடுத்து தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக அவர்கள் வெடிகுண்டை வீசியிருப்பது தெரிய வந்தது.