< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
போர்நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு பல சுரங்கப்பாதைகள் 'இடிக்கப்படும்'- இஸ்ரேல் ராணுவம் தகவல்
|25 Nov 2023 2:16 AM IST
ஹமாஸ் விடுவித்த 13 பணய கைதிகளுக்கு ஈடாக 24 பெண்கள் உள்பட 39 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
டெல் அவிவ்,
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது. முதற்கட்டமாக 13 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். ஹமாஸ் விடுவித்த 13 பணய கைதிகளுக்கு ஈடாக 24 பெண்கள் உள்பட 39 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
இவர்கள் அனைவரும் இஸ்ரேல் வீரர்களை கொலை செய்யும் நோக்கில் தாக்கியது மற்றும் கல்வீச்சில் ஈடுபட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், போர்நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு பல சுரங்கப்பாதைகள் 'இடிக்கப்படும்' தகர்க்க இன்னும் பல இலக்குகள் மற்றும் பல சுரங்கங்கள் உள்ளன. போர்நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே இன்று காலை கூட சிலவற்றை அழித்துள்ளோம் என்றார்.