< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் தேடுதல் வேட்டை; 6 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
உலக செய்திகள்

பாகிஸ்தானில் தேடுதல் வேட்டை; 6 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

தினத்தந்தி
|
31 Aug 2023 8:05 PM GMT

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் 2 தனித்தனி சம்பவங்களில் கொல்லப்பட்டனர்.

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பயங்கரவாத ஒழிப்பு துறை கடந்த வாரத்தில் 700 இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

இதனை தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய 49 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 9 தளபதிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பயங்கர, ஆபத்து விளைவிக்கும் திட்டம் ஒன்றை தீட்டி வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களின் பதுங்கு குழியில் இருந்து பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணத்தில் பிஷின் மாவட்டத்தில் நடந்த அதிரடி என்கவுண்ட்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதேபோன்று, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் லக்கி மர்வாத் நகரில் நடந்த மற்றொரு என்கவுண்ட்டர் சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் அதிகம் தேடப்பட்டு வந்த ஷகார் தின் என்ற உமர் காலித் என்பவரும் ஒருவர். இந்த தேடுதல் வேட்டையில், 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்