< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நியூசிலாந்தில் உள்ள சீன உணவகத்தில் வாடிக்கையாளர்கள் மீது கோடாரி தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்
|20 Jun 2023 9:01 AM IST
நியூசிலாந்தில் உள்ள சீன உணவகத்தில் கோடாரியுடன் நுழைந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்களை கோடாரியால் தாக்கினார்.
வெல்லிங்டன்,
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் அடுத்தடுத்து 3 சீன உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் நேற்று இரவு 9 மணியளவில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த உணவகத்திற்கு கோடாரியுடன் வந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். ஒவ்வொரு உணவகமாக சென்று அந்த நபர் தாக்குதல் நடத்தினார்.
கோடாரியால் நடத்தப்பட்ட தாக்குதலில் உணவக வாடிக்கையாளர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கோடாரி தாக்குதல் நடத்திய 24 வயது இளைஞரை கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.