< Back
உலக செய்திகள்
ஒரே ஒரு கொசுக்கடியால் 1 மாதம் கோமாவுக்குச் சென்ற நபர்: 30 அறுவை சிகிச்சைகள்  செய்து உயிரை மீட்ட டாக்டர்கள்...!
உலக செய்திகள்

ஒரே ஒரு கொசுக்கடியால் 1 மாதம் கோமாவுக்குச் சென்ற நபர்: 30 அறுவை சிகிச்சைகள் செய்து உயிரை மீட்ட டாக்டர்கள்...!

தினத்தந்தி
|
29 Nov 2022 3:26 PM IST

ரோடர்மார்க் பகுதியில் ஒரே ஒரு கொசுக்கடியால் 1 மாதம் கோமாவில் இருந்த செபஸ்டியன் ரோட்ஸ்கே என்பவரை 30 அறுவை சிகிச்சைகள் மூலம் அவர் உயிரை டாக்டர்கள் மீட்டுள்ளனர்.

பெர்லின்,

கொசுக்கடி வாங்கியவர்களுக்குத்தான் தெரியும் அது எவ்வளவுக் கொடூரமான பூச்சி என.. இந்தக் கொசுக்கடியால் பலர் இரவுத் தூக்கத்தைக் கூட நிம்மதியில்லாமல் கழித்திருப்பார்கள்.

வெறும் ஒரு கொசுவால் நமக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் ஒற்றை கொசு ஜெர்மனியில் இந்த இளைஞரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே புரட்டிப் போட்டுள்ளது. கொசுக்கள் டெங்கு, மலேரியா, உள்ளிட்ட வைரஸ்களை சுமந்தே செல்கிறது. மேலும், கொசுக்கள் கடித்தால் மோசமான உடல்நிலை பாதிப்பும் ஏற்படும்.

அந்த வகையில், ஒரு சிறு கொசுக் கடியால் ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோமா நிலைக்கே சென்றுள்ளார். மேலும், அவரது உயிரைக் காக்க சுமார் 30 ஆப்ரேஷன்கள் செய்ய வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

அந்த இளைஞரின் ரத்தத்தில் விஷம் கலந்ததால், கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரலும் செயலிழந்துள்ளது. இப்படி அடுத்தடுத்து அவரது உடல்நிலை பாதிப்புகள் மோசமாகியுள்ளது. குறிப்பாக அவரது தொடையில் இருந்த தோலையும் ஆப்ரேஷன் மூலம் நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அவரது தொடையில் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஏனென்றால் வீரியம் மிக்க பாக்டீரியாக்கள் அவரது இடது தொடையின் திசுக்களைப் பாதிவரை சாப்பிட்டுவிட்டது. இதனால் அவர் உயிர் பிழைக்கவே வாய்ப்புகள் குறைவு என்று கூறியுள்ளனர். இருப்பினும், மருத்துவர்கள் எடுத்த தொடர் முயற்சியில் அந்த நபர் வெற்றிகரமாக உயிர் பிழைத்தார். இது தொடர்பாக செபாஸ்டியன் ரோட்ஸ்கே கூறுகையில், "நான் வெளியூர் எங்கும் செல்லவில்லை. இங்கேயே தான் இருந்தேன். இங்கு எங்கோ தான் அந்த கொசு என்னைக் கடித்துள்ளது.

டாக்டர்கள் கொடுத்த தீவிர சிகிச்சையால் நான் உயிர் பிழைத்தேன். ஆசியப் புலி கொசு கடித்ததே இதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இப்போது தான் மான் மெல்லக் குணமடைந்து வருகிறேன்" என்றார்.

2021-ல் கொசுக்கடியால் காய்சல் ஏற்பட்டது. அதன்பின் ரத்தத்தில் விஷம் கலந்ததால் கல்லீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்துள்ளன.

காடு கொசுக்கள் என்றும் அழைக்கப்படும் இந்த வகை ஆசியப் புலி கொசுக்கள், ஜிகா வைரஸ், மேற்கு நைல் வைரஸ், உள்ளிட்ட கடுமையான நோய்களையும் கூட எளிதாகப் பரப்பிவிடும் என கூறுகிறார்கள்.

மேலும் செய்திகள்