< Back
உலக செய்திகள்

Image Courtesy : AFP
உலக செய்திகள்
நியூயார்க் மெட்ரோ சுரங்கப்பாதையில் படுத்து கிடந்த நபரை கொலை செய்த வாலிபர் - போலீஸ் விசாரணை

5 May 2023 1:45 AM IST
சுரங்கப்பாதை ஓரமாக படுத்து கிடந்த நபரை வாலிபர் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூயார்க் நகர மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சுரங்கப்பாதை வழியாக பலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த சுரங்கப்பாதையின் ஓரமாக படுத்து இருந்த நபரை வாலிபர் ஒருவர் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நபரின் கழுத்தில் அவர் தனது காலால் மிதித்தார். இதில் அந்த நபர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே வாலிபர் சுரங்கப்பாதை ஓரமாக படுத்து கிடந்த நபரை காலால் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவருக்கு நியூயார்க் மாகாண கவர்னர் கேத்தி ஹோச்சுல் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.