< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜப்பானில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் - ஒரு பெண், இரண்டு போலீசார் உயிரிழப்பு
|25 May 2023 8:44 PM IST
தாக்குதல் நடத்திய நபர் அருகில் உள்ள கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ,
மத்திய ஜப்பானில் உள்ள நாகானோ மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒரு பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அந்த நபர் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு போலீசார் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் அருகில் உள்ள கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நபர் தொப்பி, கருப்பு கண்ணாடி மற்றும் முகமூடி அணிந்திருந்ததாக அங்கிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், அப்பகுதியில் உள்ள தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பள்ளியிலேயே தங்க வைக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.