< Back
உலக செய்திகள்
ஜெர்மனி: சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு - பெண் பலி
உலக செய்திகள்

ஜெர்மனி: சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு - பெண் பலி

தினத்தந்தி
|
8 Jun 2022 12:35 AM IST

ஜெர்மனியில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெர்லின்,

ஜெர்மனி நாட்டின் ஸ்விட்ச் இடர் மாவட்டம் த்ரேசா நகரில் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டிற்குள் நேற்று மதியம் 1 மணியளவில் துப்பாக்கியுடன் நுழைந்த 58 வயதான நபர் அங்கிருந்த 53 வயதான பெண்ணை சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

பின்னர் தான் வைத்திருந்த அதே துப்பாக்கியால் அந்த நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்