< Back
உலக செய்திகள்
ஆப்பிரிக்க நாட்டில் லாரி மீது பஸ்கள் மோதியதில் 15 பேர் பலி - 32 பேர் படுகாயம்
உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாட்டில் லாரி மீது பஸ்கள் மோதியதில் 15 பேர் பலி - 32 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
15 Jun 2023 3:13 AM IST

ஆப்பிரிக்க நாட்டில் லாரி மீது பஸ்கள் மோதிய விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகினர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்தனர்.

பமாக்கோ,

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் தலைநகர் பமாக்கோவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று கால்நடைகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அதிகாலை நேரத்தில் இந்த லாரி பனா பகுதியில் சென்றபோது எதிரே வந்த பஸ் அதன்மீது மோதியது. இதனையடுத்து அதனை தொடர்ந்து வேகமாக வந்த மற்றொரு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பஸ்களில் இருந்த 15 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 32 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்